by Rifai Hanifa on Dec 31, 2016
by Rifai Hanifa on Dec 24, 2016
by Rifai Hanifa on Dec 17, 2016
by A.L.A.Azeez on Dec 12, 2016
அழித்துவிட்டுப் போயிருந்தது
ஒற்றை விரலால் நான்
வரைந்து வைத்த கவிதை ஒன்றை
பூ வொன்றை வரைந்து வைத்தேன்
அதையும் அப்படியே
காவு கொண்டு போனது
ஒரு குடிசையை
வீதியை
கிராமத்தை வரைந்தேன்
அனைத்தையும் அழித்துவிட்டு
ஆர்ப்பரித்தது
வரைந்த வண்ணம் இருந்தேன்
இவ்வாறு எத்தனையோ
- புதிய அரசியலமைப்பை
நல்லிணக்கப் பொறிமுறையை
மீள நிகழா திருப்பதற்கான
சட்டக் கட்டுமானம் ஒன்றை -
இவ்வாறு எத்தனையோ
அத்தனையையும் அடியோடழித்தது
நான் நின்று வரைந்த இடத்தை
ஒரு வெற்றுக் காகிதமாய்
மாற்றிவிட்டுப் போயிருந்தது
ஆயுதங்களை வரைந்து வைத்தால்
அடங்கிப் போய் விடுமோ
சில துப்பாக்கிகளை
குண்டுகளை
ஒன்றிரண்டு பீரங்கிகளை
வரைந்து வைத்தால்...
எண்ணம் உதித்த கணம்
எழுந்து ஆர்ப்பரித்து
இழுத்துக்கொண்டு போயிருந்தது
பெரும் சீற்றத்துடன் என்னை
மதவாத
இனவாத
பேரலை
எங்கள் வங்காள விரிகுடாவில்
எப்பொழுதும் உயர் அமுக்கம் தான்
- எச.ஏ.அஸீஸ்
12.12.2016
by Rifai Hanifa on Dec 10, 2016
by A.L.A. Azeez on Dec 03, 2016
Have you heard about a bird called Parasitic Jaeger?
I read somewhere that it is known as கடற் கள்ளன் (kadat kaLLan) in Tamil.
A familiar characteristic of some human beings, isn't it?
Please see note at the end of this poem for further information.
உற்றுப் பார்த்திருப்பாய்
உன் கூர் விழிப் பார்வை
வியாபிக்கும்
எல்லாப் பரப்பினையும்
ஒரு மரத்தின் உச்சியிலிருந்து
கடற்கரையின்
புதர்களில் மறைந்து
ஒரு பாறை விளிம்பில்
தரித்து நின்று
எல்லாப் பரப்பினையும்
உற்றுப் பார்த்திருப்பாய்
ஒரு பறவை
கால் கடுக்கக் காத்திருந்து
நோட்டமிட்டு
வட்டமிட்டு
பறந்து களைத்து
கண்டெடுக்கும் இரையொன்றை
கொத்தி அது கிளம்புகையில்
என்ன எதிர்பார்ப்பு
காத்திருக்கும் குஞ்சுகளுக்கு
கறி கொண்டு விரைகிறதோ
அவ்வேளை நீ பார்த்து
அப்படியே ஒரு உந்தில்
மின்னலெனப் பறந்து
மிரட்டி வழி மறிக்க
என்ன செய்யும் அப்பறவை
ஏவுகணை வேகத்தில்
எகிறி நீ விரட்டுவதை
எங்கணம் அது பொறுக்கும்
உயரத்தில் காற்றிடையே
பயந்து குடல் நடுங்கி
பரிதவிக்கும் பறவை அதன்
வாய் நழுவி விழும் இரையை
பற்றி நீ பிடிப்பாய்
பட்டென மறைந்திடுவாய்
வானத்தில் வழிப்பறியா
ஒரு வகையான பகற்கொள்ளை
கடற் கள்ளனே
நீ வாழும் விதம் புதிதல்ல
சில மனிதருக்கு
- எச்.ஏ. அஸீஸ்
03 December 2016
Vienna Tamil Sangam - A Non-profit Organisation © 2016 Vienna Tamil Sangam